கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இனையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயன்பெறும் மாவட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்,மணிக்கண்ணண் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில்
’தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூபாய் 6 கோடி செலவில் விரைவில் கட்டப்படும் எனவும்; திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூபாய் 56 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் எனவும்’ கூறினார்.
இதையும் படிங்க:மெகா தடுப்பூசி திட்டம்: கரூரில் 526 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்!