கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கலவரத்தில் பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பி, அவர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பொருட்களை எடுத்துச்சென்ற பொற்படாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராஜா (30) என்பவரை சம்பவத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராஜாவை விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி சேதப்படுத்தியவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கைது...