கள்ளக்குறிச்சி, கோட்டைமேடுப் பகுதியில் சாலையோரம் மூன்று நாட்களாக நின்றிருந்த, ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான சொகுசு வேன் திடீரென தீப்பற்றி, எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனத்தின் பேட்டரியிலிருந்து வந்த வெப்பத்தின் காரணமாக உருகி மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த தீ விபத்தில் வேனின் பின்புறம் நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன், பொதுமக்கள் தீயை அணைத்துக் கட்டுக்குள், கொண்டு வந்ததால் நல்வாய்ப்பாக அருகில் உள்ள மின்மாற்றியில் தீப்பற்றாமல் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த பூனை: போராடி மீட்ட தீயணைப்புத் துறை!