ETV Bharat / state

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு! - mudhalvar koppai 2023

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் கோப்பை.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

author img

By

Published : Dec 31, 2022, 4:16 PM IST

கள்ளக்குறிச்சி: இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான போட்டிகள் முறையே வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அனைத்து மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆகிய 5 பிரிவுகளின் கீழ் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 போட்டிகளும் என மொத்தமா 50 வகையான போட்டிகள் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

பொதுபிரிவினருக்கு (15 வயது முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம் (கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வால் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு), தடகளம்(100, 1,500 மற்றும் 3,000 மீ) குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகளும்,

பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ)110 மீ மற்றும் 100 மீ தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல் மற்றும் கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு (50 மீ ஓட்டம், இறகுபந்து-5 நபர்), பார்வைத்திறன் குறைந்தோர் மாற்றுத்திறனாளி (100மீ ஓட்டம்), மனவளர்ச்சி குன்றியோர் (100மீ ஓட்டம், எறிபந்து), செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி (100மீ ஓட்டம்), அரசு ஊழியர்களுக்கு (ஆண் அல்லது பெண்) கபடி, தடகளம்(100 மீ, 1,500 மீ, 3,000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஆகவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் தனிநபர்களுக்கு முதல் பரிசு ரூ.3,000, 2வது பரிசு ரூ.2,000, 3வது பரிசு ரூ.1,000 எனவும், மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து முதல் பரிசு ரூ.36,000 , 2வது பரிசு ரூ.24,000, 3வது பரிசு ரூ.12,000 எனவும், மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54,000, 2வது பரிசு ரூ.36,000, 3வது பரிசு ரூ.18,000 வீதம் என ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதர போட்டிகள் தொடர்பான விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் - 99435 09394, 8675773551 மற்றும் 74017 03485 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி நடத்திவரும் இத்தகைய போட்டிகளில் பொதுமக்கள் மாணவர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு டஃப் கொடுத்த இந்தியர்கள் - முன்னாள் வீரர் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.