கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்ததால் ஒன்றாம் வகுப்பிலிருந்து அனைத்து வகுப்புகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகள், ஜன்னல்கள், அவசரகால வழிகள் உள்ளிட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
தொடர்ந்து, தனியார் பள்ளி பேருந்தை இயக்கிப்பார்த்து பேருந்து முறையாக உள்ளதா என்பது குறித்தும் பி.என். ஸ்ரீதர் நேரில் ஆய்வுமேற்கொண்டார். இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு