கள்ளக்குறிச்சி: புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பி.என். ஸ்ரீதர், பொறுப்பேற்ற நாள் முதல் கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
பின் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு ஆய்வு பணிகளை செய்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாக்கடை அடைப்பு குறித்தும், கிணறு தூர்வாரும் பணி குறித்தும், பழுதடைந்துள்ள மின்மாற்றிகள் மாற்றக்கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பொதுமக்களிடையே நேரடியாகச் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோவில் ஒருவர் கைது