ETV Bharat / state

பெண்ணிடம் ரூ. 20 லட்சம் பணம் மோசடி! - kallakurichi district news

கள்ளக்குறிச்சி: ரூ.20 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மூதாட்டியிடமிருந்து ரூ. 20 லட்சம் பணம் மோசடி

author img

By

Published : Nov 17, 2020, 12:26 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோகிணி (58). இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் அலுவலராக உள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுவினரிடமிருந்து வசூல் செய்த பணத்தை தனியார் வங்கியில் செலுத்தும்போது, இவருக்கு கிராம நிர்வாக அலுவலரின் கணவர் அன்பு உடன் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது அன்பு ரோகிணியிடம் கடன் பெற்று வந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் நகையை திருப்பப்பெற ரூ. 20 லட்சம் வேண்டும் என அன்பு ரோகிணியிடம் கேட்டுள்ளார். அதை நம்பி ரோகிணியும் அன்பு கேட்ட பணத்தை கொடுத்தார்.

மூதாட்டியிடமிருந்து ரூ. 20 லட்சம் பணம் மோசடி

ஆனால் அன்பு வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ரோகிணியை ஏமாற்றி வந்துள்ளார். ரோகிணி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. ஏனென்றால் அன்புவின் தம்பி காவலராக பணிபுரிந்து வருகிறார்.

எனவே ரோகிணி அன்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பேராசை பெருநஷ்டம்: முகநூலில் நட்பாக பழகி 2.16 லட்சம் ரூபாய் மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.