கோயம்புத்தூர் மாவட்டம், சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் தனது காரில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்றார்.
அப்போது, உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி அருகே வந்தபோது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் சாலையின் தடுப்பு கட்டைகள் மோதி கார் ஏரியின் பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.