ETV Bharat / state

கரும்பை நாடிய காட்டுயானை - அச்சத்தில் வாகன ஓட்டிகள்! - erode latest news

ஈரோடு: மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சரக்கு லாரிகளில் இருந்து கொட்டப்படும் கரும்புகளை தின்பதற்காக காட்டு யானைகள் வருகை தருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

erode
author img

By

Published : Oct 25, 2019, 11:12 AM IST

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால் காட்டு யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக, கர்நாடக மாநிலத்திலிருந்து கரும்பு ஏற்றிவரும் லாரிகளில், சில லாரிகள் அதிகளவில் கரும்புகளை ஏற்றி வருவதால் சோதனைச்சாவடியின் உயர்தடுப்பு கம்பியில் சிக்கிக்கொள்கிறது. இதனால் உபரிக் கரும்புகள் சோதனைச்சாவடி அருகே கொட்டப்படுகின்றன.

பண்ணாரி சோதனைச்சாவடி

கொட்டப்பட்ட கரும்புகளைத் தின்பதற்காக அவ்வழியே செல்லும் காட்டுயானைகள் அங்கேயே முகாமிடுகின்றன. இதேபோல் இன்று அதிகாலை அங்குவந்த ஒற்றைக் காட்டுயானை நீண்டநேரம் கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுத்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

காட்டுயானைகளால் சோதனைச்சாவடியை கடக்க அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது, எனவே அதிகப்படியான கரும்புகளை ஏற்றிவரும் லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்முகுட்டி யானை முதுமலை தொப்பக்காடுக்கு அனுப்பிவைப்பு

Intro:Body:tn_erd_01_sathy_sugarcane_elephant_vis_tn10009

கரும்பு தின்பதற்காக பண்ணாரி சோதனைச்சாவடியில் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை:வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை,
புலி,சிறுத்தை, கரடி, மான் , செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் வசிக்கின்றன. யானைகள் அதிகமாக வசிக்கும் இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது சாலை யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக உயரத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகள் பண்ணாரி சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்புக் கம்பியில் சிக்கிக் கொள்வதால் லாரியின் மேல் உள்ள அதிகப்படியான கரும்பு துண்டுகளை சோதனைச்சாவடி அருகே கீழே போட்டுவிட்டு செல்கின்றனர். இந்த கரும்புகளின் வாசனையை நுகர்ந்த காட்டு யானை ஒன்று அடிக்கடி இரவு நேரத்தில் பண்ணாரி சோதனைச்சாவடியில் முகாமிட்டு கரும்பை தின்பதற்காக வருகிறது. ஒற்றை காட்டு யானை சோதனைச்சாவடி முன்புறம் சாலையோரம் வீசப்பட்ட கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுத்து என்றபடி வெகுநேரம் நின்றிருந்தது. யானையை கண்ட வாகன ஓட்டிகள், வன சோதனைச்சாவடி மற்றும் காவல் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் அச்சம் அடைந்தனர். கரும்பு லாரிகளில் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து இங்கு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.