ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன் (27). இவர் தனது தோட்டத்தில் இரண்டு மாடுகள், பத்து நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அவர் வழக்கம்போல மாடுகள், கோழிகளை தோட்டத்தில் அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த காவல் நாய் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது. இதையடுத்த ஆறு நாட்டுக்கோழிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அந்தப் பகுதியில் திருட வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல் நாய் சத்தம் போட்டதால் அதன் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கோழிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் பவானிசாகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க... கடன் தொல்லை - பெண் தீக்குளிப்பு