ETV Bharat / state

போதை பொருள் கடத்த முயன்ற இருவர் கைது

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலில் ஈடுபட்டவர்கள்
கடத்தலில் ஈடுபட்டவர்கள்
author img

By

Published : Jan 28, 2022, 12:19 PM IST

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லை பண்ணாரி சோதனைச்சவாடியில் போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது மைசூரில் இருந்து வந்த கர்நாடக பிக் அப் வேன்களை சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, வி.ஒன். பாக்குகள் மற்றும் கணேசா பாக்குகள் என 75 மூட்டைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சுமார் 2.2 கிலோ பாக்குகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து வேனில் வந்த மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசன்னா (30), சுதி என்கிற சுதாககர் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த போதை பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்த பெண் கைது - தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு வழக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.