ETV Bharat / state

கடம்பூர் மலைப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்த சம்பவம்; இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்..! - Erode news

சத்தியமங்கலம் அடுத்த குன்றியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

author img

By

Published : Aug 14, 2023, 8:47 AM IST

யானை உயிரிழந்த சம்பவத்தில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. கடம்பூர் மலைப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குன்றி, சின்ன குன்றி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் சின்ன குன்றி கிராமத்தில் பட்டா நிலத்தையொட்டி உள்ள மானாவாரி நிலம் அருகே நீண்ட தந்தங்களுடன் 25 வயதுள்ள ஆண் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் காட்டு யானை உயிரிழந்தது குறித்து, வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலைக் கைப்பற்றி, வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வு மேற்கொண்டனர். அதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையில், யானை இறந்த இடத்தின் உரிமையாளர்களான குன்றியைச் சேர்ந்த கெண்டன் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகாமல் இருக்க மின் வேலி அமைத்து வீட்டில் இருந்த உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின் வேலியில் சிக்கி இறந்ததும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் 4 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்" - கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்!

வனத்தில் யானைகள் மட்டுமின்றி பலதரப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. எனவே விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வனவிலங்குகள் புகாமல் இருப்பதற்காக சட்ட விரோதமாக அமைக்கும் மின் வேலிகள், அனைத்து காட்டு உயிரினங்களுக்கும் அழிவை உருவாக்கும் காரணியாக மாறுகிறது. எனவே, தோட்டத்து மின் வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிய விவசாயிகள் இருவரையும் கடம்பூர் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து பேட்டரி, மின்வேலி கம்பி, ஒயர் ஆகிய மின்வேலி அமைக்கும் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தோட்டத்து மின் வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிய விவசாயிகள் 2 பேரையும், கடம்பூர் வனத்துறையினர் கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அவர்களது விவசாய நிலங்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, இதுபோன்று நிலங்களைச் சுற்றி மின்வேலி கம்பிகள் அமைப்பது, வன உயிரினங்களுக்கும், அவ்வழி செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் ஆபத்தாக மாறுகிறது. இதனால் மின்வேலி அமைப்பதைத் தடுப்பதற்காக அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உலக கவனத்தை ஈர்க்கும் தமிழகம்.. பன்னாட்டு விளையாட்டு மையமாக மாறுவதால் மக்களிடையே பெருகும் ஆர்வம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.