மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயிலானது ஈரோடு ரயில்நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில்வே காவல் துறையினர் ரயிலில் வந்த மதுரையைச் சேர்ந்த பிரதீப், முருகானந்தம், முத்துபாண்டி ஆகியோரை பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களைப் பிடித்து ஈரோடு மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த 200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய இறையாமங்கலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரைக் கைது செய்து 48 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.