ETV Bharat / state

இயல்பு நிலைக்கு திரும்பிய தெங்குமரஹாடா மக்கள்! - பரிசல் பயணம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அறுவடை செய்த வாழைத்தார்கள் பரிசலில் மறுகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

normal life
author img

By

Published : Aug 13, 2019, 9:58 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழையால் சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டோடியது. ஆனால், தெங்குமரஹாடா மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மாயாற்றை கடந்து பவானிசாகர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பரிசலில் ஆபத்தான பயணம் செய்துவந்தனர்.

இயல்பு நிலைக்கு திரும்பிய தெங்குமரஹாடா மக்கள்

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பரிசல் பயணத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது மாயாற்றில் நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் கிராமத்தில் இருந்து பரிசல் மூலம் வெளியூர் சென்ற கிராம மக்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

மேலும், தெங்குமரஹாடாவில் அறுவடை செய்யப்பட்ட வாழை, பப்பாளி பழங்கள் பரிசலில் வைத்து மறுகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கிராமத்துக்குள் முடங்கி கிடந்த தெங்குமரஹாடா மக்கள், இயல்பு நிலை திரும்பியுள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.

Intro:Body:tn_erd_05_sathy_mayaru_river_normal_vis_tn10009

தெங்குமரஹாடாவில் நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பியது: பரிசலில் வாழைத்தார் வைத்து மறுகரைக்கு கொண்டு சென்று விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயாற்றில் பரிசல் பயணம் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அறுவடை செய்த வாழைத்தார்கள் பரிசலில் அக்கரைக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து லாரியில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் பெய்த கனமழையால் சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்யோடியது. தெங்குமரஹாடா மக்கள் அத்தியவசிய தேவைக்கு மாயாற்றை கடந்து பவானிசாகர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பரிசலில் ஆபத்தான பயணம் செய்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பரிசல் பயணத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது மாயாற்றில் நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மாயாற்றில் பரிசல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இதனால் கிராமத்தில் இருந்து பரிசல் மூலம் வெளியூர் சென்ற கிராமமக்கள் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாயாற்று கரையில் சேறும் சகதியுமாக உள்ளது. லாரி, வேன் போன்ற சரக்கு வாகனங்கள் மாயாற்று சேற்று புதைமண்ணில் சிக்கிக்கொள்ளும் என்பதால் உள்ளூர் மக்களால் சேறும் சகதியும் அகற்றப்பட்டு வருகிறது. மாயாற்று கரையில் வறண்டநிலை ஏற்படும் வரை சரக்கு வாகனங்கள் இயக்குவது தடை செய்யப்பட்டுபள்ளது. தெங்குமரஹாடாவில் அறுவடை செய்யப்பட்ட வாழை, பப்பாளி பழங்கள் பரிசலில் வைத்து மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது லாரியில் ஏற்றி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. தெங்குமரஹாடா மக்களுக்கு விநியோக்கப்படும் ரேசன் பொருள்கள் பரிசல் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கிராமத்துக்குள் முடங்கி கிடந்த தெங்குமரஹாடா மக்களுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.