ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி கும்மிடாபுரம் பீமேஸ்வரர் கோயிலில் சாணி அடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் முக்கிய அம்சமாக சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, விநோதமான முறையில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இத்திருவிழாவில் சாணி அடி விளையாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த விழாவின் நோக்கம், இந்த கிராம மக்கள் நோய்யின்று, விவசாயம் செழித்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி, கோயில் பின்புறம் குவித்து வைத்திருக்கும் சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியும், எறிந்தும் விழாவை கொண்டாடினார்.
இதையும் படிங்க:மாடுகளிடம் மிதிபடுவதற்காகவே முண்டியடிக்கும் பக்தர்கள்!