தமிழ்நாட்டில் கரோனோ தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கரோனா நிதி வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையறிந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பண்ணாரிஅம்மன் நித்யா நிகேதன் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர் மிகுலன் தனது உண்டியல் சேமிப்பான ரூ. 2 ஆயிரத்தை வழங்க முன் வந்தார்.
இதையடுத்து தாய் மஞ்சுளாவுடன் சென்ற சிறுவன் சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கரிடம் உண்டியல் சேமிப்பு ரூ. 2 ஆயிரத்தை வழங்கினார்.