ஈரோடு: ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சத்தியமங்கலம் தளவகிரி மலைக்கோயிலில் பூப்பறிக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.
பூப்பறிக்கும் விழாவையொட்டி வனப்பகுதிக்கு சென்று பெண்கள், சிறுவர்கள் பூப்பறித்து வந்து வீட்டில் சாணத்தால் பிடித்த விநாயாகருக்கு வைத்து கரும்பு, மஞ்சள் குலைகள் வைத்து பொங்கல் படைத்து வழிபடுவர்.
இந்தநிலையில், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால், நேற்று (ஜன.15) தவளகிரி மலைக்கோயில் மூடப்பட்டு, பூப்பறிக்கும் விழா நடைபெறவில்லை. பக்தர்கள் கோயில் வாயில் முன் நின்று வழிபட்டு சென்றனர்.
இதையும் படிங்க: Haridwar hate speech: உத்தரகாண்டில் மதத் தலைவர் கைது!