ஈரோடு:Dengue Fever: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக டெங்கு நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அண்மையில் 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு நோயால் உயிரிழந்ததார். இதனால் நகராட்சி சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை காய்ச்சலால் அவதிப்படுவதால் சாலை ஓரங்கள், தாழ்வானப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரைக் கண்டறிந்து தடுப்பு கிருமினிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
வீதி வீதியாக குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப்பணியில் நகராட்சிப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் தொட்டிகளில் குளோரின் அளவு சரிபார்க்கப்படுகிறது.
கொசுப்புழு ஒழிப்பு
அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் நீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்டத் தேவையற்றப்பொருட்கள் உள்ள இடங்களில் கொசுப்புழு ஒழிப்புக் கிருமி நாசினி தெளிக்கும் புகை மருந்து அடிக்கும் பணிகளில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வணிக நிறுவனங்களிலும் தற்போது நோய்த்தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. டெங்குப் பாதிப்பு அதிகரித்து வருவதால், தொடர்ந்து நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றும், நீண்ட நாள் பயன்பாடின்றி உள்ள பொருள்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள்: 8 வாரங்களில் அகற்ற உத்தரவு