ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் வனத்தை விட்டு வெளியேறி புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில், திம்பம் மலைப்பகுதியை அடுத்துள்ள ஆசனூர் அருகே சாலை வழிமறித்தவாறு காட்டு யானை ஒன்று நேற்று (பிப்.16) அங்கும், இங்கும் நடமாடியது. யானை சாலையில் நடமாடுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தனர்.
சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றபின்பு வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. பகல் நேரங்களில் காட்டுயானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டு யானைகள்