ETV Bharat / state

பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சண்டை: ஸ்தம்பித்த போக்குவரத்து!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகளை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ்
author img

By

Published : Sep 10, 2019, 11:40 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு மாலை நான்கு மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்குமிடையே டைமிங் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு பேருந்தை முந்திச் சென்று சாலையின் நடுவே வழிமறித்து சண்டையிட்டனர். இதன் காரணமாக சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே தகராறு

இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை எடுக்குமாறு கூறியதோடு, சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி சண்டையிட்ட ஓட்டுநர்களை எச்சரித்தனர். இதனால் சத்தியமங்கலம் - கோவை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:Body:சத்தியமங்கலத்தில் டைமிங் தகராறு காரணமாக இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி சண்டை போட்டதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு செல்லும் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை பஸ்நிலையத்தில் இருந்து எடுப்பதற்கு டைமிங் தகராறு காரணமாக சண்டையிட்டனர். அப்போது ஒரு பேருந்தின் ஓட்டுநர் பஸ்நிலையத்தில் இருந்து பேருந்தை இயக்கி கோலை சாலைக்கு வந்தபோது மற்றொரு தனியார் பேருந்தின் ஓட்டுநர் இந்த பேருந்தை முந்தி சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு இருவரும் மீண்டும் சண்டையிட்டனர். இதன்காரணமாக சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்த பேருந்தை எடுக்குமாறு கூறியதோடு சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி சண்டையிட்ட ஓட்டுநர்களை எச்சரித்தனர். இதனால் சத்தியமங்கலம் - கோவை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.