ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி நால்ரோடு - சிறுவலூர் ரோட்டில் கழிவுநீர் பாதை புதுப்பித்தல், வார சந்தை வளாகத்தில் நான்கு வணிக்கடைகள் கட்டுதல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுதல் போன்ற ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் ஒவ்வொரு பணியும் நடைமுறைப்படுத்தும் வரைபடங்களை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியதோடு, கவுந்தப்பாடி பகுதியில் நிறைவேற்றப்படவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: "தைரியமாக இருங்கள் மாயமான மீனவர்கள் விரைவில் கரை திரும்புவார்கள்" அமைச்சர் ஜெயக்குமார்!