ஈரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான கே.க.பி (KKP) டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியர் இளமுருகன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். வசூல் பணத்தைக் கையாடல் செய்ததாக நிறுவனத்தின் விசாரணைக்கு நேற்று முன் தினம் சென்றவர், நேற்று அரசு மருத்துவமனையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிறுவன உரிமையாளரால் இளமுருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கேகேபி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளமுருகன் உடலை வாங்க மறுத்து ஈரோடு அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
இதனிடையே இளமுருகன் மரணம் தொடர்பாக கேகேபி டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர் உள்ளிட்ட ஆறு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிறுவன உரிமையாளர் பாலுசாமி மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த இளமுருகனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல ஜவுளி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை - உரிமையாளர் மீது உறவினர்கள் புகார்