ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அருந்ததியர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Aug 8, 2020, 5:35 PM IST

ஈரோடு: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அருந்ததியர் இளைஞர் பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து அருந்ததியர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்!
Erode people protest against new education policy

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட அருந்ததியர் இளைஞர் பேரவையின் சார்பில் ஈரோடு பழைய ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும், நவீன குலக்கல்வித் திட்டமாக அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வி திட்ட முறையை நடைமுறைப்படுத்துவதாகவும் மும்மொழிக் கொள்கையை திணித்து தாய் மொழி கல்வியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டு இளம் குழந்தைகளை அச்சுறுத்தி பள்ளிகளுக்கு செல்லாத சூழலை ஏற்படுத்தும் என்றும் இந்த திட்டத்தால் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை கற்பதும், உயர்கல்விக்கு செல்வதும் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதனால், நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள கல்வித் திட்டத்தையை மீண்டும் அமல்படுத்திடவும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.