ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரியகொடிவேரி ஊராட்சியில் குக்கிராமங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 3.25 கோடி ரூபாய் செலவில் பூமி பூஜை மற்றும் மேம்பாட்டு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்யைன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்டாயக் கல்வி திட்டத்தில் மாணவர்கள் சேர கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. கட்டாயக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 372 கோடி ரூபாய் நிதித்துறை மூலம் வழங்கப்படவுள்ளது. எல்கேஜி, யூகே.ஜி பயிலும் மாணவர்களுக்கு கட்டிய கல்வி மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களில் தமிழ் வழி பள்ளிகள் மூடுவது குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் பிரதமருடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன" என்றார்.
மேலும், அதிமுக வழிகாட்டு குழுவில் இடம் பெறாதது குறித்த கேள்விக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆதிதிராவிடர் என்பதால் தரையில் உட்கார வைக்கிறார்கள்" - ஊராட்சித் தலைவரின் கணவர் பேட்டி