ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில் யானை வேதநாயகி, கடந்த 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனை பவானி பொதுமக்கள், இந்து அறநிலையத் துறையினர், வனத் துறையினர் சேர்ந்து அஞ்சலி செலுத்தி யானையை நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில், யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘யானை வேதநாயகி கடந்த 43 ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு தொண்டு செய்து வந்த நிலையில் தற்போது திடீரென உயிரிழந்திருப்பது பவானி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யானை, அறநிலையத் துறை சார்பில் முறையாக கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், உடல்நலக் குறைவின் காரணமாக யானை வேதநாயகி இறந்து விட்டது.
விரைவில் அரசு, தனியார் அமைப்பின் உதவியுடன் யானை அல்லது குட்டி யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்புக்கு மதம் தடையில்லை - கோயில் யானை இறப்புக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்!