ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இதற்கு நேராக பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் குண்டம் திருவிழா நேற்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. அப்போது, அம்மனுக்கு திருமுழுக்கு வழிபாடு, மலர் அலங்கார தரிசனம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இன்று வீதிகளில் அம்மன் உலாவந்தபோது அப்பகுதி மக்கள் சாலைகளில் கோலமிட்டு வரவேற்று வழிபட்டனர். பின்னர் மாரியம்மன் கோயில் முதல் மசூதி வாசல்வரை அமைக்கப்பட்ட 21 அடி குண்டத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் தீமிதிக்க கோயில் பூசாரி சிவண்ணாவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், குண்டம் திருவிழாவில் சண்டை மேளம், வீரபத்ரா நடனம், பீரப்பா நடனம், பசவேஸ்வரா குழுவினரின் டிரம்ஸ், இன்னிசை நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்தக் கோயில் விழாவில் முஸ்லீம் கோயிலுக்குச் சீதனமாக சேலை, பழங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘உள்ளே நடந்தவற்றைக் கூற முடியாது’ - ஆலோசனைக்குப் பின்னர் ரஜினி பேட்டி