ஈரோடு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோர பொதுமக்கள் துணி துவைக்கவும், கால்நடை மேய்க்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்