ஈரோடு: சீனா நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனம் டெல்டா நிறுவனம் 7ஆவது சர்வதேச தானியங்கி கண்டுபிடிப்பு போட்டியை நடத்தியது. இதில், 90 நாடுகள் ஆன்லைன் மூலம் போட்டியில் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரியின் ஆய்வக மாணவர்கள் ஜான்இன்பராஜ், முகமது ரஹீன், அனிஷ்குமார் அடங்கிய குழுவினர் இப்போட்டியில் கலந்து கொண்டு கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினர்.
இவர்கள், ஜி ஒன் சேவர் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். உலக வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பன் அளவை இந்த கருவி குறைக்கிறது. மேலும் காற்றின் மாசு குறைந்து வேளாண்மை, தாவரங்கள் வளர ஆக்ஸிஜன் அளவைவும் பெருக்கும் சிறப்பை கொண்டுள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்பிற்கு சர்வதேச அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. வெற்றி மாணவர்களை கல்லூரி தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமமியம் பாராட்டினார்.
இதையும் படிங்க: பி.வி. சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!