ETV Bharat / state

ஈரோடு அருகில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் - வானம் தெளிந்தவுடன் மீண்டும் பறந்தது - ஈரோடு செய்திகள்

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் ஹெலிகாப்டரில் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டர் ஈரோடு அருகே அவசரமாக தரை இறங்கியது.

ஈரோட்டில் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

author img

By

Published : Jan 25, 2023, 8:55 PM IST

ஈரோடு அருகில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் - வானம் தெளிந்தவுடன் மீண்டும் பறந்தது

ஈரோடு: பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மற்றும் அவரது இரு உதவியாளர்கள் என இருவர், திருப்பூர் காங்கேயம் வழியாக, திருவனந்தபுரம் செல்வதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக சென்று வானில் பறந்துகொண்டிருந்தனர்.

அப்போது, கடுமையான பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை மேலும் இயக்க முடியாத சூழலில் உகினியம் வனக்கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அங்கு அரை மணி நேரம் வரை காத்திருந்த ரவிசங்கர் அக்கிராம மக்களைச் சந்தித்தார்.

அப்போது, பள்ளி மாணவர்கள் ஹெலிகாப்டரை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் அங்கிருந்த பள்ளி குழந்தைகளை அழைத்து நலம் விசாரித்துள்ளார். அதன் பின்பு ஹெலிகாப்டர் செல்ல வானம் தெளிவாக இருந்ததால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டது. அப்போது ஆரவாரத்துடன், அவரை குழந்தைகள் வழி அனுப்பி வைத்தனர்.

மேலும், ஹெலிகாப்டரை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வனக்கிராமத்தில் ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதால், யானை நடமாட்டம் உள்ள கிராமத்தில் யானைகள் வராதபடி மக்கள் பார்த்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:பிபிசி சர்ச்சை ஆவணப்படம் ஒளிபரப்பு - எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது.. போராட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.