ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி! - Heavy snowfall Dhimbham Highway

ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள திம்பம் மலைப்பாதையில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை மெதுவாக இயக்கினர்.

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி  திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டம்  Heavy snowfall Dhimbham Highway  Dhimbham Highway
திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்
author img

By

Published : Dec 24, 2019, 1:58 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதி குளிர்ந்து இதமான கால நிலை நிலவுகிறது. இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் இன்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவியது.

27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இம்மலைப்பாதையில், 20ஆவது கொண்டை ஊசி வளைவு வரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கினர்.

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்

இதன் காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு பண்ணாரியிலுருந்து ஆசனூர் வரை செல்லும் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும், வனத்துறையினர் வாகனங்களை மொதுவாக இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ஜெர்மனி மாணவர்; திருப்பி அனுப்பிய இந்தியா!

Intro:Body:tn_erd_01_sathy_pani_timbam_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்:
வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் ,திம்பம் மலைப்பாதையில் முற்பகலில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அப்பகுதி குளிர்ந்து இதமான கால நிலை நிலவுகிறது. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. காலை முதலே பனிப்பொழிவுடன் காணப்பட்ட ஆசனூரில் முற்பகல் வரை கடுமமையான பனிமூட்டமாக காணப்படுகிறது. திம்பம் வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளில் 20ஆவது வளைவு வரை வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டமாக உள்ளது. மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை மித வேகத்தில் இயக்கியதால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள திம்பம் மலைப்பாதையில் கடும் பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயங்கினர்.

வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மிகவும் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கினர். இதனால் பண்ணாரியில் இருந்து ஆசனூருக்கு மெதுவாக ஊர்ந்து சென்றதால் ஒரு மணிநேரத்தில் கடக்க பாதையில் சுமார் 2 மணிநேம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் பனிப்பொழிவு காரணமாக எதிரே வரும் விலங்குகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.