ETV Bharat / state

வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை - விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு: வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேளாண் குறைதீக்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை
author img

By

Published : Oct 27, 2020, 4:31 PM IST

மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கரோனா தொற்று காரணமாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த காணொலியை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பெரும்பாலானோர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகள், கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

கடந்த மாதங்களில் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் வேளாண் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தால், இன்று (அக்டோபர் 27) காணொலி மூலம் நடத்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பங்கேற்ற விவசாயிகள் குடிமராமத்து பணிகள், பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு, நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள், விதை கொள்முதல், விற்பனை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை விவசாயிகள் ஆட்சியரிடம் எடுத்துரைந்தனர்.

பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இலங்கையில் மஞ்சள் விற்பனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுச் செல்லப்படும் 100 கிலோ மஞ்சளுக்கு ஒரு கிலோ தங்கம் பெறுவதையும் சுட்டிக்காட்டினர்.

அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மஞ்சள் தேவை அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட மாவட்ட விவசாயிகள், மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் பல ஆண்டுகளாக இருப்பு வைத்துள்ளனர். அதனால் மஞ்சள் ஏற்றுமதிக்கு உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு மஞ்சள் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.