ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த அங்கணகவுண்டன் புதூரில் விவசாயிகள் பலரும் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். தினந்தோறும் ஆடுகளை இவர்கள் மேய்ச்சலுக்கு காட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஆட்டுப்பட்டியில் இருந்து மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் ஒரு வெள்ளாடு அங்குள்ள 70 அடி கிணற்றில் விழுந்தது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த வீரர்கள், கயிறு கட்டி 70 அடி கிணற்றில் இறங்கி வெள்ளாட்டை மீட்டு அதனை பரிசோதித்தபோது, ஆடு நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்