ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், தொட்டம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை போன்ற பூக்கள் சகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது பூக்களின் விளைச்சல் அதிகமானதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ ரூ.500 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது. தற்போது 12 டன் பூக்கள் சந்தைக்கு வருகிறது. சத்தியமங்கலம் மலர்கள் விற்பனை நிலையத்தில் ஏலத்துக்கு கொண்டவரப்பட்ட பூக்கள் வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் பூக்களின் விலை சரிந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை திருப்பி எடுத்து செல்லமால் அதனை வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைக்கு விற்றனர். மேலும் பூ பறிக்க செலவிடும் கூலி அதிகமாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் பூக்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டனர். பூ விவசாயிகளை காப்பாற்ற "செண்ட் தொழிற்சாலை" அமைக்க அரசு முன்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.