ETV Bharat / state

மாயாற்றில் வெள்ளம் - ரேசன் பொருள்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிப்பு - Flood in erode

ஈரோடு மாவட்டதிலுள்ள மாயாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் ரேசன் பொருள்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலையால் பரிசல் மூலம் ஆபத்தான நிலையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

மாயாற்றில் வெள்ளம்:  ரேசன் பொருள்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிப்பு!

author img

By

Published : Jul 8, 2022, 12:21 PM IST

ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாட தேவைக்கு சத்தியமங்கலம், பவானிசாகர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். இக்கிராமத்தைச் சுற்றிலும் மாயாறு ஓடுவதால் பரிசல் மூலம் மட்டுமே மாயாற்றை கடந்து செல்ல இயலும். மாயாற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது காய்கறி லாரிகள், டெம்போ, ஜீப் போன்ற வாகனங்கள் மாயாற்றில் கடந்து செல்லுவது வழக்கம்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசலில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அன்றாட தேவைகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் காலை நேரத்தில் பேருந்தில் செல்வதற்கு ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது பரிசல் இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் கல்லம்பாளையம், அள்ளிமாயார், சித்திராம்பட்டி, புதுக்காடு, தெங்குமரஹாடா ஆகிய கிராமமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

ரேசன் பொருள்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிப்பு!

மேலும் கோத்தகிரியில் இருந்து லாரி மூலம் ரேசன் பொருள்கள் வாங்கி வரமுடியாத நிலை ஏற்படுள்ளது. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து தடைபட்டதால் இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழை, கத்தரிகாய், மிளகாய் போன்ற காய்கறிகள் வெளியூருக்கு அனுப்ப முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளது.

காலை 7 மற்றும் மதியம் 1.30 மணிக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் தெங்குமராஹாடவுக்கு இயக்கப்படுவதால் பேருநத்தில் கூட காய்கறி எடுத்துச் செல்லமுடியாமல் சிறு விசாயிகள் தவிக்கின்றனர். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லம்பாளையம் மற்றும் தெங்குமரஹாடா உயர்மட்ட பாலம் கட்டும் திட்டத்தை உடனே நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரேசன் கடையை துவம்சம் செய்த கரடி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.