ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வரதம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (44). இவர் அதே பகுதியில் மரப்பட்டறை வைத்துள்ளார்.
தீபாவளி தொடர் விடுமுறையால் கடந்த இரண்டு நாட்களாக நாகேந்திரன் மரப்பட்டறையை திறக்கவில்லை. இந்நிலையில் இன்று பட்டறையில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து புகை வெளியேறியுள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் மரப்பட்டறையில் வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரப்பொருட்கள் தீயில் ஏரிந்து சேதமடைந்தன. பட்டறை அருகில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கார் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து; பட்டாசு வெடித்ததால் சம்பவம்!