ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு இளைஞர்கள் ஒருங்கிணைந்து நிர்பயா என்கிற பெயரில் குறும்படமொன்றைத் தயாரித்துள்ளனர்.
உள்ளூர் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பk கலைஞர்கள் உதவியுடன் கடந்த சில மாதங்களாக ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரையிடப்பட்ட நிர்பயா குறும்படம் பார்வையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்தது. பெண்கள் மீது மரியாதையும் அன்பும் வைத்துள்ளவர்கள் இதை பார்த்த பின் அடுத்தவர்களையும் பார்த்திட வலியுறுத்த வேண்டுமென்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
நிர்பயா என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணென்பது மட்டும் நினைவுக்கு வருவதைத் தவிர்த்து, நிர்பயா என்றால் அவரது போராட்டம் நினைவுக்கு வரும் வகையில் படத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.