ETV Bharat / state

பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு: வரும் கல்வியாண்டில் பயன்படுத்தப்பட உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வாகனங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு: ஆட்சியர் பார்வையிட்டார்
author img

By

Published : May 13, 2019, 4:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு தரச்சான்று வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 192 தனியார் பள்ளிகளின் 1,538 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஈரோடு அடுத்துள்ள பவளாத்தாம்பாளையத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தனியார் பள்ளி வாகனங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கான அவசர வழி உள்ளதா? ஓட்டுநர் உரிமம், முதல் உதவிப்பெட்டி, தீ அணைப்பு கருவி போன்றவை இருக்கிறதா? உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள் மது அருந்தியபடியும், புகைபிடித்தபடியும் வாகனங்களை இயக்கக்கூடாது, மாணவர்களை வாகனத்தில் ஏற்றும்போதும், இறக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளையும் வழங்கினர்.

ஈரோடு 13.05.2019
சதாசிவம்

 வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்...

2018-2019 கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு தரச்சான்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு அடுத்துள்ள பவளாத்தாம்பாளையத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 192 தனியார் பள்ளிகளின் 1538 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.. இதில் வாகன ஓட்டுனர்கள் மது அருந்தியபடியும் புகைபிடித்த படியும் வாகனங்களை இயக்க கூடாது,  மாணவர்களை ஏற்றும் போதும், இறக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது , மேலும் அவசரகால வழி, வாகனத்தின் தரைத்தளத்தின் தன்மை குறித்தும் சோதனை செய்யப்பட்டது.வாகனத்தில் முதலுதவி பெட்டி,தீயணைப்பு கருவி உள்ளிட்ட  பொருட்களின் தன்மை குறித்தும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்...

Visual send mojo app
File name:TN_ERD_02_13_SCHOOL 
_VECHILE_CHECKING_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.