ETV Bharat / state

மருத்துவமனையில் பூட்டிக்கிடக்கும் கழிவறை... திறக்க நோயாளிகள் கோரிக்கை..! - Erode Government Head Hospital

ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் பல மாதங்களாக பூட்டப்பட்டிருக்கும் கழிவறைகளை பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு அரசு மருத்துவமனை கழிப்பிட பிரச்சினை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனைகழிப்பிட பிரச்சினை Erode Government Hospital Toilet Issue Erode Government Hospital Erode Government Head Hospital Government Head Hospital Problems
Erode Government Hospital Toilet Issue
author img

By

Published : Mar 9, 2020, 4:14 PM IST

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அனைத்து வகை சிகிச்சைப் பிரிவுகளையும் கொண்டுள்ளதுடன், 24 மணி நேர சிகிச்சை மையமாகவும் விளங்கிவருகிறது. ஈரோட்டின் மையப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளதால் இந்த மருத்துவமனைக்கு ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வந்து சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் விபத்து கால அவசர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, தீக்காயங்களுக்கு தனிப்பிரிவு, பெண்கள் பிரசவம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு, கண் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களுக்கான தனிபிரிவுகளும், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க தனி வார்டுகள், சித்த மருத்துவத்திற்கு தனி மருத்துவமனை என அனைத்து வகை நோய்களுக்கும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் சிறப்பு ஸ்கேன் வசதியும் கொண்டுள்ள மருத்துவமனையாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல், மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உடனிருந்து கவனித்து வரும் நோயாளிகளின் குடும்பத்தினர், புறநோயாளிகளின் உடன் வருபவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட கழிவறைகளை அமைத்துத் தந்தனர். ஆனால், கழிவறைகள் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பின்னரும் அந்தக் கழிவறைகள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை

பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டித் தரப்பட்ட கழிவறைகள் திறக்கப்படாததால் மருத்துவமனைக்கு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. புறநோயாளிகளின் சிரமம் உணர்ந்து கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறைகளைப் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மின்வாரியப் பணிகள்: விண்ணப்பிக்க கால அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.