ஈரோடு அருகே சித்தோட்டில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான இளம்பெண் கார்த்திகா என்பவரை மணிகண்டன் என்பவர் காதலித்து திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கார்த்திகா தொடர்ந்து வற்புறுத்தவே 2018இல் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் பதுக்கிவைத்தார்.
இந்தக் கொலை வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், கார்த்திகாவின் முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மணிகண்டனிடம் வசூலிக்கும் அபராத தொகையுடன் அரசின் உதவித்தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:
காவலன் செயலியை எல்லா நேரங்களிலும் பயன்படுத்தலாம் - காவல் துணை கண்காணிப்பாளர்