சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் பழங்குடியின மக்கள் ராகி, கம்பு, மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இந்தப் பயிர்களை காட்டுப்பன்றிகள், யானைகள் சேதப்படுத்தியதால் பழங்குடியின மக்கள் வாழ்வாரத்தை இழந்து நின்றனர். இதனால் தினந்தோறும் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது வனவிலங்குள் விரும்பாத மாற்றுப்பயிரான பருத்தி சாகுபடிக்கு மாறினர்.
இதையடுத்து கடம்பூரில் மானாவாரியாக முதன்முறையாக 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
140 நாள்கள் பயிரான பருத்தி காய்பிடித்துள்ளது, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பருத்தி சாகுபடியால் வனவிலங்குகள் தொந்தரவு இன்றி சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மானாவாரியில் குறைந்த உற்பத்தி செலவு என்பதால் ஏக்கருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![பருத்தி சாகுபடிக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-03a-sathy-cotton-cultivationz-photo-tn10009_21122020141321_2112f_1608540201_284.jpg)
மேலும், பருத்தி குவிண்டால் 5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு இல்லாமல் செய்யக்கூடிய சாகுபடி பயிராக பருத்தி மாறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: