போக்குவரத்துக் கழக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நேற்று முன்தினம் (பிப். 24) அறிவித்திருந்தனர்.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது,
- மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது,
- ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது,
- புதிய ஊதிய ஒப்பந்தத்தை உறுதிசெய்வது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட ஒன்பது போக்குவரத்துக் கழகச் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன.
பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 720 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதன்படி நேற்று (பிப். 25) ஈரோடு மாவட்டத்தில் 70 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டன.
இது குறித்து ஈரோடு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறும்போது, தொழிற்சங்கத்தினர் நேற்று (பிப். 25) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தவுடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம். அண்ணா தொழிற்சங்கத்தினர், தற்காலிக ஊழியர்கள் மூலம் இன்று பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன எனக் கூறினார்கள்.
இதையும் படிங்க:போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்