ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனப்பகுதியில் ஏராளாமான யானகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி தாளவாடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் யானைகள் நடமாடும் சாலையோரம் 50 வயதுள்ள பெண் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து அங்கு சென்ற தாளவாடி காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கும்டாபுரம் பகுதியில் சில நாள்களாக சுற்றித் திரிந்ததாகவும், குமிட்டாபுரத்தில் இருந்து வனச்சாலையில் நடந்த சென்றபோது அங்கு முகாமிட்டிருந்த காட்டுயானை தாக்கியதில் அப்பெண் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், அப்பெண் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த பார்வதி (50) என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது காட்டு யானைகள் குமிட்டாபுரம் பகுதியில் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.