ஈரோடு: கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் அவினாசி - அத்திக்கடவு திட்டம் ஆயிரத்து 856 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு இத்திட்டம் முடிக்கப்பட வேண்டிய நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்களாக இத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
விரைந்து திட்டத்தை செயல்படுத்த கோரியும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையிலான கட்சியினர் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பாஜக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த தமிழ்நாட்டு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதியுடன், திட்டம் காலதாமத்திற்கான காரணத்தை விளக்கி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். இதனையடுத்து சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: Viral Video... கொட்டும் மழையில் படுத்துறங்கிய போதை ஆசாமி