ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொவக்காளிபாளையம் தடுப்பணை, கட்டுமானப்பணி, குள்ளம்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப்பணி, வெள்ளாளப்பாளையம் ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் சமுதாய நலக்கூடம், கலிங்கியம், அயலூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் இன்று (செப்.16) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டுமாணப்பணிகளின் தரம், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறதா? என்பது குறித்தும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ள திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பது குறித்தும் அரசு அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார். குறிப்பாக, குத்தகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிமுடிக்கப்படாத கட்டடங்களுக்கு நிதி வழங்கக்கூடாது என ஆய்வின் போது அலுவலர்களிடம் தெரிவித்தார்.
அரசு குறிப்பிட்டுள்ள அளவுகளில் கட்டடங்கள், தடுப்பணைகளில் கான்கிரீட் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என பரிசோதனைச் செய்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:அரியலூர் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு!