திருமணம் ஆகாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள், ஆண்களின் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடப்பதற்காக இந்த யாகம் நடைபெற்றது. காலை எட்டு மணிக்கு கணபதி ஹோமம், முருகர் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோர்கள் அழைப்பு ஆகியவை நடைபெற்றன. நவகிரக தோஷம், மாங்கல்யம் தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவர்த்தி, முன்னோர் சாபம் உட்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்பு பூஜை நடத்தப்பட்டன.
யாக குண்டத்தில் தேன் கலந்த பொரி போட்டு வணங்கி ஆண்கள் வாழை மரத்துக்கு மாலை அணிவித்தனர். களத்ர தோஷம் நிவர்த்தி பெண்கள் பால் மரத்துக்கு மாலைஅணிவித்து மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பரிகாரம் செய்தனர்.
பக்தர்கள் தொட்டாஞ்சிவிங்கி கருந்துளசிக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழங்குவதால் முற்றிலும் விலகிவிடும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த யாகத்தில் பழம், பூஜை பொருள்கள், விடுபூக்கள், எலுமிச்சைபழம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு இந்த யாக பூஜையில் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டதாக கோயில் நிர்வாகி கே.டி. பழனிச்சாமி தெரிவித்தார்.