ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்யாண மண்டபத்தில் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து குறித்து காணொலி மூலம்பிரதமர் மோடி உரையாற்றினார்.
பின்னர் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுக குறித்த கேள்விக்கு எந்தவொரு பதிலும் கூர முடியாது. தேர்தல் நேரத்தில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். அமைச்சர் சிவி.சண்முகம் கூறிய கருத்துக்கு பதில் கருத்து கூறமுடியாது சில ஊடங்கள் தவறாக கேள்வியை கேட்பதால் தான் இது போன்று நடக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக நடக்கும் திட்டத்தின் மூலம் எழுச்சிபெறும். பொங்கல் பரிசு தொகை குறித்து எந்த தவறான கருத்தையும் நான் கூறவில்லை. வேளாண் சட்டத்தால் எந்தவொரு உண்மையான விவசாயும் பாதிக்கவில்லை. சட்டத்தை எதிர்ப்பது கமிஷன் மண்டி ஏஜென்ட்கள் மட்டுமே.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. சாதி வாரியான வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது தான். மத்திய அரசின் திட்டங்களுக்கு விளம்பரம் தேவையில்லை மக்களுக்கு தெரியும். பாஜக கொள்கை ஆன்மீகம் தேசியம் தான். ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்கு பின் பாஜக நிலைப்பாட்டை அறிவிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? - ஆர்.எஸ்.பாரதி கலாய்!