ETV Bharat / state

கூட்டணியை பாதிக்கும் கருத்துகள் வெளியிடுவதை அண்ணாமலை தவிர்க்க வேண்டும் - எம்.யுவராஜா - ஈரோடு செய்திகள்

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுத்திடும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதைத் தவிர்த்திட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.

தமாக யுவராஜா
தமாக யுவராஜா
author img

By

Published : Dec 23, 2020, 9:18 PM IST

ஈரோடு: தமிழ் மாநில காங்கிரஸ கட்சியின் இளைஞர் அணித்தலைவர் யுவராஜா ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூட்டணி குறித்து பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்திட வேண்டும்.

திமுக தலைவர் ஆளுநரிடம் ஊழல் அறிக்கையொன்றை வழங்கியுள்ளார். அது நகைப்புக்குரியது, நாடகத்தனமானது. இந்தியாவிற்கே ஊழலை அறிமுகப்படுத்திய கட்சி திமுக. ஊழல் குற்றச்சாட்டுக்காக ஆட்சியை இழந்த திமுக, ஊழல் குறித்துப் பேசுவது அபத்தமாக இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை நம்பியுள்ள திமுகவிற்கு தான் பாதிப்பாக இருக்கும், அதிமுக கூட்டணிக்கு ரஜினியால் எந்த பாதிப்பும் இருக்காது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததற்குப் பிறகு அதிமுக கூட்டணியை ஆதரித்திட வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வழங்க கூடிய வாய்ப்புக்கள் மற்றும் மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களுக்கு எதிராக திமுக வழக்குகளைத் தாக்கல் செய்தால் இளைஞர்களும், மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், திமுக தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக: சட்டப்பேரவை துணை சபாநாயகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.