ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்திலுள்ள விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் முறிந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "எங்களது விவசாய தோட்டங்களில் பச்சை, நாடா, கதலி உள்ளிட்ட வாழை ரகங்களை நாங்கள் பயிரிட்டிருந்தோம். ஆனால் நேற்று (மே 29) பெய்த கனமழை காரணமாக எங்களது தோட்டத்திலிருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாழைமரங்கள் முறிந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. தொடக்க வேளாண்மை வங்கிகளில் எங்களது நகைகளை அடகு வைத்து தங்களது விவசாயத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கல் சேதமடைந்துள்ளன" என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை'