ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அரசுப்பள்ளியில் ரீடு தொண்டு நிறுவனத்தினர், சென்னை கலைக்குழுவினர் ஆகியோர் இணைந்து பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
பள்ளி மாணவிகளுக்கு நாடகம், பறை, இசை, தப்பாட்டம் போன்ற இசை வடிவில் விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து செயல்விளக்கம் நடித்துக் காட்டினர்.
தொடர்ந்து, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !