ETV Bharat / state

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வயது முதிர்ந்த யானை பரிதாபமாக உயிரிழப்பு! - Erode

ஈரோடு - சென்னம்பட்டி வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்ந்த யானை பரிதாபமாக உயிர் இழப்பு

author img

By

Published : Aug 10, 2022, 9:03 PM IST

ஈரோடு சென்னம்பட்டி வனத்துறை ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று வனப்பகுதிக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்னம்பட்டி வனச்சரகம், ஜரத்தல் பீட் வனப்பகுதியில் சென்றபோது ஆண்யானை ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து, ஊழியர்கள் உடனடியாக சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் ராஜாவுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து வனத்திற்குள் சென்ற வனத்துறை அலுவலர்கள் இறந்த யானையைப் பார்வையிட்டு மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதமுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதம், வனச்சரகர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் சென்னம்பட்டி கால்நடை மருத்துவர் மாலதி வரவழைக்கப்பட்டு அங்கேயே இறந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானையின் தந்தங்கள், மற்றும் கோரைபற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்தில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது இறந்தது ஆண் யானை என்றும், அதன் வயது சுமார் 40-க்குள் இருக்கும் என்றும் வயது முதிர்வின் காரணமாக யானை இறந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேற்றில் வழுக்கி விழுந்த பெண் யானை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.